Monday, September 22, 2008

குரு

குரு என்பவர் யார் ? குரு எங்கே இருக்கிறார் ? இப்படி கேள்வி கேட்டல் பெரும்பான்மையினர் சொல்லும் பதில் ,தனக்கு கல்வி சொல்லி தந்தவர் ,ஒரு தொழிலை கற்றுத்தந்தவர் இவர்களைத்தான் , அதுவும் ஒரு வகையில் நியாயம் தான். அதை யாராலும் மறுக்க முடியாது . மறுப்பவர் யாவரும் இருக்கவும் முடியாது . அதை நானும் ஒத்து கொள்கிறேன் . இதற்கு மேலாக இன்னொன்று இருக்கிறது . அது தான் நம் "மூளை" . இதற்கு ஒரு அறிஞ்ர் கூறுகிறார் . "உனது குரு வேறு எங்கும் இல்லை ,உன் மூளையில் தான் இருக்கிறது "என்று . என்னை பொறுத்த வரையில் இதை நான் ஏற்றுக்கொள்வேன் . ஒருவன் ஒரு செயலை செய்யும் போது அவனது குரு என்ன சொல்லி தந்தாரோ அதை விட சிறப்பாக செய்வானேயானால் அது அவனுக்கு மட்டும் பெருமையல்ல அவனது குருவுக்கும் பெருமை . அந்த செயலை அவனால் எப்படி செய்ய முடிந்தது .அவனுக்கு உதவியது என்ன ? கண்டிப்பாக அவனது மூளை தான் அவன் தக்க சமையத்தில் சரியான முடிவை எடுக்கும் பட்சத்தில் அவன் ஒரு செயலை சரியாக செய்ய முடிகிறது . அவனுக்கு அந்த செயலை செய்ய தூண்டியது யார் ?"மூளை"அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த மூளை யையும் குரு என்பதில் தவறு இல்லை . இதற்காக ஆசிரியர்களையும் ,ஒரு தொழில் சொல்லி தந்தவர்களையும் நான் குறை சொல்ல வில்லை , இந்த இரண்டுடன் மூளை யையும் சேர்த்து கொள்ளலாம் என்பது தான் என் கருத்து . உங்கள் கருத்து என்ன ?

Tuesday, September 09, 2008

பட்ட மரம்


பட்ட மரம் ! பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது .பார்ப்பவர்கள் அனைவரின் மனதையும் ஈர்க்கும் என்று நினைக்கிறேன் . ஆனால் அதன் இளமை காலம் எவ்வளவு அழகானதாக இருந்து இருக்கும் .சற்று யோசித்து பாருங்கள் .எத்தனை பறவைகள் அதன் வாழ்கையில் வந்து போயி ருக்கும் .எத்தனை பேர் அதன் நிழலில் ஒய்வு எடுத்து இருப்பார்கள் .எத்தனை சிறுவர்கள் அதில்பழங்கள் பரித்து தின்று இருப்பார்கள் .அந்த மரம் எவ்வளவு பெருமை பட்டு இருக்கும் . இப்போது அதன் நிலைமை ! நிழலுக்காக யார் போவர்கள் ? எந்த பறவை போகும் ? பழம் பறிக்க யார் போவர்கள் ? யாரும் கவனிப்பார் இல்லை , அப்படியே யாரும் பார்த்தாலும் அதை இறக்க கண்ணோட்டத்துடன் தான் பார்க்கிறார்கள் .இந்த மரம் செய்த தவறு என்ன ? காலத்தின் கட்டாயம் , இறைவனின் செயல் .இறைவன் விதித்த கட்டளை அது . இதற்கு யாரும் பொறுப்பாக இருக்க முடியாது . இல்லாம் விதிப்படி தான் நடக்கும் . இறைவன் நினைப்பதே உலகில் நடக்கிறது . இந்த மரத்தின் விதி இப்படி எழுதி இருக்கலாம் .அதன் படி நடந்து இருக்கிறது . இதை யாராலும் மாற்ற முடியாது . இந்த மரத்திற்கே இந்த நிலைமை என்றால் மனிதர்களாகிய நாம் எம்மாத்திரம் . யோசித்து பாருங்கள் . இதை உணர்ந்து நடந்தாலே ஒருவனுன் தவறான பாதையில் செல்ல மாட்டான் . எந்த ஒரு தவறையும் செய்யமாட்டான் என்பதுதான் உண்மை . எந்த ஒரு செயல் செய்தாலும் அதற்கான பலன் நமக்கு வாழ்நாளில் கிடைத்தே திரும் என்பது தான் உண்மை . ஒருவன் வாழ்நாளில் நன்மை செய்கிறான் என்றால் அதற்கான பலன் உடன் கிடைக்காவிட்டாலும் அவனின் கடைசி காலங்களில் அவன் காக்கப்படுவான் என்பது தன் உண்மை . ஒருவன் வாழ்நாளில் தவறு செய்கிறான் என்றால் அப்போது அவனுக்கு சில நன்மைகளை தந்தாலும் ,அவனின் கடைசி காலங்களில் அதற்கான பலனை அடைந்து தான் திருவான் . இது தான் இயற்கை .இறைவன் வகுத்த நியைதியும் அது தான் . அதற்காக இந்த மரத்தை குறை சொல்லவில்லை . இறைவனின் செயலை தான் சொல்கிறேன் . அனைவரும் இறைவன் முன் சமம் .யாரும் விதிவிலக்கு அல்ல . அனைவருன் முடிந்த வரையில் நன்மை செய்யவே முற்படுவோம் . நன்மையே செய்வோம் .

Thursday, September 04, 2008

புதியவன்

நான் இந்த பதிப்பிற்கு புதியவன் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் .அன்பு தோழ்ர்களே !தோழிகளே !!

எழிலகம்


சென்னை கடற்கரையில் அமைந்துள்ள எழிலகத்தின் இரவு தோற்றம் தான் இது . என் கண்களையும் கொள்ளை கொண்டது .அப்படியே என் கேமராவும் கிளிக் செய்து விட்டது .

வண்ணத்து பூச்சி


வண்ணத்து பூச்சிக்கு கூட பசி மயக்கம் தான் கண்ணை மறைத்து விட்டது போலும்

இந்தியாவின் நிலை என்றும் இப்படித்தான் இருக்குமா ? உங்கள் பதில் என்ன ?